மிருகக் காட்சி சாலைகள் மீண்டும் திறப்பு!!!



கொவிட் -19 வைரஸ் தொற்றினால் மூடப்பட்ட தேசிய மிருகக் காட்சிசாலைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக் காட்சிசாலை மற்றும் ரிதிகம சஃபாரி பூங்கா ஆகியவை இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இவ்வாறு திறக்கப்படும் மிருகக்காட்சி சாலைகள் மற்றும் பூங்காக்களில் கடுமையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்படும்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

(News.lk)


மிருகக் காட்சி சாலைகள் மீண்டும் திறப்பு!!! மிருகக் காட்சி சாலைகள் மீண்டும் திறப்பு!!! Reviewed by Editor on February 01, 2021 Rating: 5