சடலங்களை அடக்க அனுமதித்துள்ளமை எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை - அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறு தான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம்.

இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்களால் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது.

எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது. எனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழிகாட்டல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளதோடு, இந்த விடயத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.


சடலங்களை அடக்க அனுமதித்துள்ளமை எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை - அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு சடலங்களை அடக்க அனுமதித்துள்ளமை எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை - அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு Reviewed by Editor on February 28, 2021 Rating: 5