இன்று (24) புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியும் படுகாயமடைந்துள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி காயம்!!!
Reviewed by Editor
on
February 24, 2021
Rating:
Reviewed by Editor
on
February 24, 2021
Rating:
