பொத்துவில் பிரதேச சபையின் பாதீடு புதிய தவிசாளரினால் நிறைவேற்றம்!!


பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான பாதீடு(Budget) 2021.02.24 ஆம் திகதிய சபை அமர்வில் கௌரவ தவிசாளர் எம். எச். அப்துல் றஹீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு 19 கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை (Budget) நிறைவேற்றுவதற்காக ஆதரவு வழங்கிய  19 பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களுக்கும் கௌரவ தவிசாளரினால்  மனமார்ந்த நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டதுடன் பொத்துவில் பிரதேசத்தின்  சகல துறைகளினதும் எதிர்கால அபிவிருத்திகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும்  எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும். இதற்காக இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒன்றினைந்து பிரதேசத்தின் நிலையான அபிவிருத்திக்காக ஒன்றிணைவதற்காகவும் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் பாதீடு புதிய தவிசாளரினால் நிறைவேற்றம்!! பொத்துவில் பிரதேச சபையின் பாதீடு புதிய தவிசாளரினால் நிறைவேற்றம்!! Reviewed by Editor on February 25, 2021 Rating: 5