
(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின விழா இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சட்டத்தரணி பாத்திமா நஹீஜா முஸப்பிர் தலைமையில் இன்று (04) வியாழக்கிழமை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தேசியக் கொடியை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சட்டத்தரணி பாத்திமா நஹீஜா முஸப்பிர் அவர்களால் ஏற்றப்பட்டதோடு, எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன அஞ்சலியும் இடம்பெற்றது.

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் விடப்பட்டதோடு காரியாலய சிரமதானப் பணியும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் ஏ.எல் ஹம்சஹார் நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லிம் ,கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் ஹெசேரத் பண்டார உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
February 04, 2021
Rating: