
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜி.பஸ்மில் தலைமையில் இன்று (04) காலை நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டினது தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் பழா மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், சுதந்திர தினத்தின் முக்கியத்துவம், இலங்கை நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மூவினத் தலைவர்கள், சுதந்திரத்தின் வரலாறு குறித்து விரிவாக அவர் விளக்கமளித்தார்.
நிகழ்வில் கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், முகாமைத்துவ வேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
February 04, 2021
Rating:

