
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் இலங்கையின் 73வது சுதந்திர தினக் கொண்டாட்டம் அக்கரைப்பற்று நீர்த்தடாக வளாகத்தில் மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் இன்று (04) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.


நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ அதாஉல்லாஹ் உரையாற்றும் போது...
(வீடியோ அழுத்துங்கள்)
இந்நிகழ்வில் மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ பொறுப்பதிகாரி மும்மதங்களின் மதப்போதகர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
February 04, 2021
Rating: