இன்று (15) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் தகவல் வங்கி (Data Bank) செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அனுபவப் பகிர்வு வழிகாட்டல் செயலமர்வானது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று அப்பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக தகவல் வங்கி சார்பில் எஸ்.ஆப்தீன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), கே.எம்.கலீல் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் ஏ.எல்.அமானி முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வு தொடர்பான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை என்பனவற்றை பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் வழங்கினார்.
