
(றிஸ்வான் சாலிஹூ)
கலாசார அலுவல்கள் திணைக்கத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ் வழங்குதலும், கலைஞர் சுவதம் , துளிர்விடும் இலக்கியம் நூல் வெளியீடும், நாட்டை அழகுபடுத்துவோம் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஆகியன நேற்று (03) பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜனாப். ஏ.அப்துல் லத்தீப் அவர்களும் மற்றும் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா. ஏ.கே.றொசின்தாஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். ஏ.எம்.தமீம், கணக்காளர் ஜனாப் எஸ்.எல்.சர்தார்மிர்ஸா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜனாப் ரி.எம்.ரின்சான், கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி பி.நவப்பிரியா, ஜனாப் தௌபீக், ஜனாப் எம்.முக்தார் ஹுசைன், மற்றும் பிரதேச கலைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகார்த்த சின்னங்கள் ஆகியவை பிரதம மற்றும் விசேட அதிதிகளினால் கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
