(றிஸ்வான் சாலிஹூ)
"ஒன்றாக வளர்த்து ஒன்றாக வளர்வோம்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மரநடுகை மற்றும் பழங்களை உண்ணுதல் எனும் உயர் நோக்கில் அரசினால் மாணவர்களுக்கு மாமரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜீ.பஸ்மீல் அவர்களும், கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலூர் றஹ்மான், உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) கலாநிதி ஹனீபா இஸ்மாயில், ஓய்வு நிலை அதிபரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.சஹாப்தீன், கலாநிதி அல்-ஹாபீழ் எம்.ஐ.சித்தீக் (அஸ்ஹரி), முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) ஏ. எல். எம். மீரா சாஹீப் அவர்களும், விஷேட அதிதிகளாக அஷ்ஷேக் ஆர்.ஏ.பாரீஸ், அஷ்ஷேக். முபீன், விவசாய போதனாசிரியர் எஸ்.எல்.எம்.அஸ்ஹர், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
