கட்டார் தூதரக வளாகத்தில் கத்தாருக்கான இலங்கை தூதுவர் மொஹமட் மபாஸ் மொஹிதீனை புத்தளம் சஹிரியன்ஸ் கால்பந்து அமைப்பின் செயற்குழு பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.
கத்தார் நாட்டில் உள்ள புத்தளம் சஹிரியன்ஸ் அமைப்பால் நடாத்தப்படும் நடவடிக்கைகள், குறிப்பாக கால்பந்து முகாம்கள், தன்னார்வத் திட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து இலங்கை தூதுவருக்கு அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் தெளிவுபடுத்தினார்கள்.
தூதுவர் மபாஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த இளைஞர்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு, சமூகத்தில் மக்களை ஈடுபடுத்தியதற்காக புதளம் சஹிரியன்ஸ் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, கத்தார் நாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு கால்பந்து மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இரு தரப்பினரும் கலந்துரையாடினார்கள்.
புத்தளம் சஹிரியன்ஸ் என்பது கட்டாரில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே புகழ்பெற்ற கால்பந்து கழகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
