அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ்.எம்.சபீஸ் தெரிவு!!!

 



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் புதிய தலைவராக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



நேற்று (12) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளி வாசலில் இடம்பெற்ற அனைத்துப் பள்ளிவாயால்கள் சம்மேளன பொதுக் கூட்டத்திலேயே இவர் சம்மேளனத்தின் புதிய  தலைவராக அனைவரினாலும் மனமுவர்ந்து ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

 


இவர் இந்த பாரியதொரு பதவியில் அமர்த்தப்பட்டுள்ள விடயமானது, மக்கள் இவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அமானிதமுமாகும் என்று குறிப்பிடலாம்.



மிகவும் இளவயதில் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், தனது இளமைக்காலத்திலிருந்து தன்னை மக்கள் சேவைக்கு அற்பனித்திருந்தாலும் அண்மைக்கால இவரது நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அழியா இடத்தினை ஏற்படுத்தியுள்ளதை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.


அது மாத்திரமல்லாமல், இவர் அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையில் கூட குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் தன்னால் முடிந்தவரை பல உதவிகளை இந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆற்றியமையினால் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் என பலரும் இவருக்காக  பிரார்த்தனை செய்வதனை காணக்கூடியதாக இருக்கிறது.


இத்தருணத்தில் பாரியதொரு இந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ள எஸ்.எம்‌.சபீஸ் அவர்கள், நீண்ட ஆயுளோடு மக்களுக்கு சகல வழிகளிலும் பணி புரிய வேண்டும் என பிரார்த்தித்து பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ்.எம்.சபீஸ் தெரிவு!!! அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ்.எம்.சபீஸ் தெரிவு!!! Reviewed by Editor on February 13, 2021 Rating: 5