
இராணுவ துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களில் முதலாவது Lieutenant Colonel (லெப்டினன்ட் கேர்னல்) தரத்திற்கு தாவூத் அனஸ் அஹ்மத் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஏறாவூரை சேர்ந்த அனஸ் அஹ்மத் அவர்கள் இராணுவத்தில் Second Leutinant ஆக இணைந்து Major,Commanding officer போன்ற பதவி உயர்வுகளைப் பெற்றவராவார்.
இவர், சமூகப்பற்றும், நாட்டுப்பற்றும் மற்றும் இன நல்லுறவும் கொண்டவராவார்.
இவரின் தந்தையார், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் கடந்த 1990.07.03 அன்று கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் முன்னாள் மூத்த அதிபரும், ஏறாவூரின் முதலாவது பட்டதாரியும், சிறந்த கல்விமானுமாகிய யூ.எல்.தாவூத் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 27, 2021
Rating: