Iconic Youths அமைப்பினால் மரநடுகை நிகழ்வு.!



(றிஸ்வான் சாலிஹூ)

"புதிய உலக ஒழுங்கு விதிகளுடன் சுதந்திரமாக மீண்டெழுவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக Iconic Youths அமைப்பினால் இன்று (04) வியாழக்கிழமை மர நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக அமைப்பின் தலைவர் உ.லெ.தில்ஷான் அவர்களின் தலைமையில் நிறைவு பெற்றது.




இந் நிகழ்வானது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (6.30 AM - 7.00), அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம் (8.00 AM - 8.30 AM), அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் (8.30 AM - 9.00AM) ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், Iconic Youths அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் முகமாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று அமைப்பின் தலைவர் தில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.


Iconic Youths அமைப்பினால் மரநடுகை நிகழ்வு.! Iconic Youths அமைப்பினால் மரநடுகை நிகழ்வு.! Reviewed by Editor on February 04, 2021 Rating: 5