பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நமக்கு ஒரு நேர்மையான அரசியல் ஒன்றினை செய்துகாட்டி விட்டு மர்ஹூம் முஹைதீன் அப்துல்காதர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் 17 வருடங்களாகின்றது.
அன்னாரின் சேவைகள் கல்குடா அரசியல் வரலாற்றில் பேசப்படவேண்டிய ஒன்றாகும் என்பதோடு நமது இளைய தளமுறைக்கு வரலாறாக காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
கடற்றொழில் மற்றும் சமூத்திர வளங்கள் பிரதி அமைச்சராகவும் இருந்த அவர்கள் கல்குடா பிரதேசத்தில் சிறந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் வடிகால் அமைக்கப்பட வேண்டுமென்று திட்டங்களை தீட்டி சிறந்த வழிகாட்டல்களை வழங்கிச்சென்ற ஒருத்தர்.
ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானம் முகைதீன் அப்துல் காதர் பெயர் கொண்டு வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்ட பின்னரும் அம்மைதானத்திற்கு அப்பெயர் சூட்டப்படாமல் இருப்பது பெரும் துரதிஸ்டவசமானது.
இன்ஸா அல்லாஹ் குறித்த மைதானம் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் மைதான என அழைக்கப்படுவதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துக்கொள்றேன்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக பொருளாளராக இருந்து, கட்சியை வளர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்தது கட்சியின் கொள்கைகளை எம் சமூகத்தின் மத்தியில் பரப்புவதற்கு அன்னார் எடுத்த முயற்சிகள் என்றும் பாராட்டதக்கவையாகும்.
கல்குடா அரசியல் வரலாற்றில் நமது சமூகத்தின் முதுகெலும்பாய் திகழ்ந்து பாரிய களப்பணி செய்து இறைவனடி சேர்ந்து இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றும் உங்களையும் உங்கள் சேவைகளையும் இந்த சமூகம் மறந்துவிடகூடாது என்பதற்கான பதிவாக இது அமையும்.
அண்ணாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
(சட்டத்தரணி ஹபீப் றிபான்)
