(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் 2021ஆம் ஆண்டு க.பொ.த சாதாரன தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுடனான விசேட சந்திப்பு (29) திங்கட்கிழமை காலை அதிபர் எஸ்.றிபாயுடீன் தலைமையில் பாடசாலை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம், தரம்-11 வலையத்தலைவர் ஆசிரியர் எம்.சீ.எம்.சாக்கீர், க.பொ.த சாதாரன தரத்திற்கு பொறுப்பான வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றலோடு இடம்பெற்றிருந்தது.
அதிபர் மற்றும் பிரதி அதிபர் தங்களுடைய உரையில், இம்முறை (2021) இப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கான எதிர்கால திட்டமிடல்கள், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகவும் பெற்றோர்களுக்கு பூரண விளக்கத்தினை அவர்கள் வழங்கியதோடு, பாடசாலையின் கல்வி மற்றும் பெளதீக அபிவிருத்தி தொடர்பிலும் அதிபர் மற்றும் பிரதி அதிபர் இருவரும் இணைந்து செயலாற்றுவது அனைவரினதும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 29, 2021
Rating:


