(றிஸ்வான் சாலிஹூ)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எம்.ஏ.சீ. அஹமட் ஷாபிர் அவர்கள் இன்று (10) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.
தமன பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே இவருக்கான பதவியுயர்வு கடிதம் வழங்கப்பட்டு இன்று அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளராக கடமை புரிகின்ற எம்.ஏ.சீ. அஹமட் நசீல், புதிய செயலாளரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக எம்.ஏ.சீ.ஏ.ஷாபீர் கடமையேற்பு!!!
Reviewed by Editor
on
March 10, 2021
Rating:
Reviewed by Editor
on
March 10, 2021
Rating:


