(றிஸ்வான் சாலிஹூ)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பிரதேச செயலகத்திற்கு ஒரு மைதான அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபை அதாஉல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் கரப்பந்தாட்ட திடலை அபிவிருத்தி செய்யும் நிகழ்வு இன்று(10) புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. எம்.ஏ.றாஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.றஸான், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், அக்கரைப்பற்று பொதுஜன பெரமுன அமைப்பாளர் ஏ.எம்.நிஹால் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள்,விளையாட்டு கழக வீரர்கள்,நிர்வாகிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
March 10, 2021
Rating:


