(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய புதிய முகாமையாளராக சாய்ந்தமருதை சேர்ந்த பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜீத் தனது கடமையை இன்று (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், அம்பாறை பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் முகாமையாளராக கடமையாற்றி வந்த நிலையில், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் காணப்பட்ட முகாமையாளர் வெற்றிடத்திற்கே சபையினால் பொறியியலாளர் முஸாஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராக கடமையாற்றிய பொறியியலாளர் எம்.ரீ.எம்.பாவா, உதவி பொது முகாமையாளராக பதவியுயர்வு பெற்று தலைமைக் காரியாலயத்திற்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
