
(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் தரம்- 03 இல் கல்வி கற்கும் செல்வன் ஆதில் அப்ஸான் என்ற மாணவன் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை செல்லும் போது இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஆலம்குளம் பகுதியை பெரும் கவலைக்கும் சோகத்திலும் உள்ளாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மாணவன் இன்று (30) காலை தனது துவிச்சக்கர வண்டியில் ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு வீட்டில் இருந்து செல்லும் போது எதிரே வந்த உழவு இயந்திரம் இந்த மாணவன் மீதி மோதியதில் தலையில் ஏற்பட்ட காயத்தினால் இம் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவன் மீது உழவு இயத்திரத்தை மோதுண்ட சாரதி தற்போது தலைமறைவாகி இருப்பதோடு, விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாணவனின் தந்தை கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
