
(றிஸ்வான் சாலிஹூ)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் பொல்லடி அண்ணாவிமார்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வும், அனுபவப் பகிர்வும் -2021 எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தெளபீக் அவர்களின் தலைமையில் இன்று (30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், ஆய்வாளர்களான சிறாஜ் மஸ்ஹுர், கலாநிதி ஹனீபா இஸ்மாயில் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாசார, கலாசார மேமம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து பிரபல்யம் வாய்ந்த அண்ணாவியார்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
