யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார தரப்பினருடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை யாழ் கல்வி வலய பாடசாலைகளை மாத்திரம் தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயம் தவிர்ந்த ஏனைய கல்வி வலயங்களில் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் வழமை போல இடம்பெறும் எனவும் தற்போதுள்ள இடர் நிலைமையின் பொருட்டே யாழ்ப்பாணக் கல்வி வலய பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்த படுவதாகவும் எனினும் அந்த ஒரு வார கல்வி செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்ற விடுமுறை நாட்களின் போது அவை மீள்நிரப்பப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
March 28, 2021
Rating:
