(றிஸ்வான் சாலிஹூ)
“கிராமங்களை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் குற்றச்செயல்களில் இருந்து நமது பிராந்தியங்களை எவ்வாறு பாதுகாப்பது சம்பந்தமாகவும் அதற்குரிய ஆலோசனைகளும் தீர்வுகளும் தொடர்பான அக்கரைப்பற்று மற்றும் திருக்கோயில் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட விசேட கலந்துரையாடல் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் திரு.எஸ்.கருணாரத்ன தலைமையில் இன்று (28) அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு தலைவர்கள், செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மதகுருமார்களை அழைத்து எமது கிராமங்களை எவ்வாறு பாதுகாப்போம் என்ற பாதுகாப்பது சம்பந்தமாகவும் அதற்குரிய ஆலோசனைகளும் தீர்வுகளும் கலந்துரையாடப்பட்டு பலரும் தங்களுடைய ஆக்கபூர்வமான சில தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.
