யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரில் இன்று (02) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் அவர் வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயாரைக் கைது செய்தனர்.
கணவர் குவைத்தில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள நிலையில், இவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொலிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
March 02, 2021
Rating:


