(எம். பூமுதீன்)
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று (02) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை பொறுப்பேற்று, அடக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, உடல்களை இரணைதீவுக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு
Reviewed by Editor
on
March 02, 2021
Rating:
Reviewed by Editor
on
March 02, 2021
Rating:
