முன்பள்ளி மாணவர்களின் பாவனைக்கு உபகரணங்கள் வழங்கல்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

ஆரம்ப கால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகத்தினால் முன்பள்ளிப் பருவ சிறார்களை பாதுகாக்கும் நோக்கோடு முன்பள்ளிகளுக்கு கை கழுவும் உபகரணங்கள் மற்றும் தனி நபர் தொடுகையற்ற உடல் வெப்பமானிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்பள்ளிப் பருவ உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ். கரீமா அவர்களின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (24) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.கே.றோசின்தாஜ் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி மாணவர்களின் பாவனைக்கு உபகரணங்கள் வழங்கல்!!! முன்பள்ளி மாணவர்களின் பாவனைக்கு உபகரணங்கள் வழங்கல்!!! Reviewed by Editor on March 25, 2021 Rating: 5