(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராக கடமையாற்றி உதவி பொது முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் சம்மாந்துறையைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.ரீ.ஏ.பாவா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (24) புதன்கிழமை அக்கரைப்பற்று நீர் வழங்கல் திட்ட காரியாலயத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சஹீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமருது பிரதேச பொறியியலாளர்கள், அக்கரைப்பற்று முகாமையாளர் காரியாலய பொறியியலாளர், நீர் வழங்கல் திட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதவியுயர்வு பெற்று செல்லும் உதவி பொது முகாமையாளர் பாவா அவர்களுக்கு நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று முகாமையாளருக்கான பிரியாவிடை நிகழ்வு...
Reviewed by Editor
on
March 24, 2021
Rating:
