ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பு..


(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களை அவர்களது அழைப்பின் பெயரில் ஜனாதிபதி அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள், எதிர்கால மாகாணசபை தேர்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி உறுதிமொழி அளித்தகாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நேரடியாக கலந்துரையாடி குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் தீர்த்து கொள்ள இருப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தில் முடிவுகள் எட்டப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பு.. ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பு.. Reviewed by Editor on March 12, 2021 Rating: 5