பல நாட்களாக சொல்லப்பட வேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்று அதை சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு உள்வாங்கப்பட்டிருந்தேன்
நமது படைப்பாளிகளின் படைப்புக்கள் சுருங்கிய வண்ணமாக இருக்கின்றது சில கதிரைகளை நிரப்பியவண்ணம்
பல மாதங்கள் கடினப்பட்டு எழுதப்படும் நாவல்களும் எழுத்துக்களும் வறுமையை நோக்கி நகர்கின்றது அதற்கான காரணம் அதனை வெளியீடுபவர்களின் நேர்த்தியற்ற குருகிய கட்டமைப்பு
பல மாதங்கள் கடினப்பட்டு எழுதப்படும் நாவல்களும் எழுத்துக்களும் வறுமையை நோக்கி நகர்கின்றது அதற்கான காரணம் அதனை வெளியீடுபவர்களின் நேர்த்தியற்ற குறிகிய கட்டமைப்பு என்பதே முதல் காரணமாகும்
கவிதை அல்லது கதை நாவல்கள் வெளியிடும் போது அந்த புத்தக வெளியீட்டுக்கு நமது பிரதேசங்களில் கவிதைகள் கதைககளை படைப்பவர்களை கொண்டே முற்று முழுதாக கதிரைகள் நிரப்பப்படுகின்றது
அதனாலேயே இன்றும் எமது படைப்புக்கள் ஒரு வட்டத்துக்குள் சுத்திதிரிகின்றது
ஒரு கவிதை அல்லது ஏதாவது புத்தக வெளியீடுகள் என்பது அந்த வெளியீட்டின் தாக்கம் எல்லோரையும் சந்திக்க கூடியதாக இருக்க வேண்டும்.
நாம் எழுதுகின்ற எழுத்துக்கள் அல்லது படைப்புக்கள் நமது சந்தையில் நுகரப்படும் வீதம் கூட்டப்பட வேண்டும் என்றால் முதலாவது அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அதனை சார்ந்தவர்களை அழைக்கும் படலம் நிறுத்தப்பட்டு எல்லா துறைகளிலும் உள்ள துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட வேண்டும் அதே நேரம் எமது எல்லா துறைசார் நிபுணர்ளும் அந்த வெளீயீட்டுக்கான முன்னெடுப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
அப்போதே எமது எழுத்துக்கள் எல்லோரையும் சென்றடையும் இல்லையேல் ஒருவட்டத்துக்குள் நமது படைப்புகள் சுத்திக் கொண்டே திரியும்.
(நன்றி - Razeen Notes)
சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், சொல்லுகிறேன்....
Reviewed by Editor
on
March 21, 2021
Rating:
Reviewed by Editor
on
March 21, 2021
Rating:
