கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலை, இலக்கியத்திற்கான விருது மற்றும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கலாசார திணைக்களப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கௌரவிப்பு வைபவம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் தலைமையில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டார்.
ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் அரசியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவராவார்.
