மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்தார்...

 


சம்மாந்துறை அல்-அர்சாத் மகா வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி ஏ.பீ.பாத்திமா றினோஸா (PGDE,Dip in HR, BSW, HNDE,NCE) நீதி அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சை தேர்வின்படி வழங்கப்பட்ட நியமனத்தின் பிரகாரம் கடந்த வியாழக்கிழமை (25) மாவட்ட நீதவான் கௌரவ பயாஸ் ரசாக் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், தனது ஆசிரியர் சேவையை மூதுார் உமர் பாறூக் வித்தியாலயத்திலும், வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையிலும் சேவையாற்றியதுடன். தனது இளமாணிப் பட்டத்தினை ஆங்கில மொழி மூலமும் பட்டப்பின் கல்வியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், மேலும் மனித உரிமைகள் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழினையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்தார்... மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்தார்... Reviewed by Editor on March 28, 2021 Rating: 5