(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக காத்தான்குடியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.ரீ.எம்.றாபி கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் முன்னிலையில் இன்று(24) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஆணையாளராக பதவியேற்ற ஏ.ரீ.எம்.றாபி அவர்கள், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இதற்கு முதல் கடமையாற்றியிருந்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எம். அஸ்மி அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து இங்கு நிலவிய வெற்றிடத்திற்கே இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
