கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் எஸ்.றிபாயுடீன் அதிபராக நியமிக்கப்பட்டார்!!!




(றிஸ்வான் சாலிஹூ)


அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (1AB பாடசாலை) இலங்கை அதிபர் சேவையினை சேர்ந்த புதிய அதிபர் செய்னுலாப்தீன் றிபாயுடீன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தனக்கு வழங்கப்பட்ட அதிபர் நியமனத்திற்கமைவாக இன்று (24) புதன்கிழமை காலை பாடசாலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.






கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் அடிப்படையில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கவைமாக இவர், நேர்முகப் பரீட்சையில் சித்தி பெற்று நிரந்தர அதிபராக இன்று பாடசாலையில் கடமையை பொறுப்பேற்றார்.



ஒரு ஆங்கில ஆசிரியராக கல்விச் சேவைக்குள் காலடி எடுத்து வைத்த இவர், இதே பாடசாலையில் ஆசிரியராக, பிரதி அதிபராக, தற்காலிக அதிபராக இருந்து தற்போது நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார் என்பது அவரின் வளர்ச்சியின் மைக்கற்களாகும்.

நிகழ்வில் உரையாற்றிய புதிய அதிபர் தனதுரையில், பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் இரவு பகலாக உழைத்து கொண்டிருக்கும் தற்போதைய அதிபர், உதவி மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் அனைவருடனும் பாடசாலையின் வளர்ச்சிக்காக உங்கள் அனைவருடனும் நானும் கைகோர்த்து செல்வதற்கு இருக்கின்றேன். குறிப்பாக நாம் அனைவரும் ஒரு குழுவாக இருந்து பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் சிறந்த அடைவு மட்டத்திற்கு உழைக்க வேண்டும் என்று தனதுரையில் தெரிவித்துள்ளதோடு, பழைய அதிபர் அவர்கள் இந்த பாடசாலைக்கு மிகவும் குறுகிய காலத்தில் செய்த கல்வி வளர்ச்சியின் மாற்றங்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.









பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய முன்னாள் அதிபர் எம்.எஸ்‌.எம்.அஸ்லம் (SLPS) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி மற்றும் முகாமைத்துவம்) எம்.எம்.சித்தி பாத்திமா அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான் அவர்களும், விசேட அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.சஹாப்தீன், ஆயிஷா மகளிர் கல்லூரி அதிபர் ஜனாப்.ஹையூ, பாடசாலைகளின் அதிபர்கள், அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் உதவி மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவ குழு, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.








கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் எஸ்.றிபாயுடீன் அதிபராக நியமிக்கப்பட்டார்!!! கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் எஸ்.றிபாயுடீன் அதிபராக நியமிக்கப்பட்டார்!!! Reviewed by Editor on March 24, 2021 Rating: 5