
(றிஸ்வான் சாலிஹூ)
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட காணியில் கொவிட்-19 ஜனாஸாக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எம்.நெளபர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஜனாஸா நல்லடக்க பணியில் ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், ஏ.இல்யாஸ் மௌலவி, சபையின் ஊழியர்களான எம்.ஜே.அல்பத்தாஹ், ஏ.ஜி.றபீக், எம்.மம்மூன், எம்.பௌசுல், எம்.றிஸ்வி ஆகியோர் ஒவ்வொரு ஜனாஸாக்களையும் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தங்களது உறவினர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மனநிலையுடன் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தியாகத்துடன் இரவு பகலாக நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
தவிசாளர் அவர்கள், குறித்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் அற்பணிப்பான சேவையினை பாராட்டியதோடு அவர்களது தேக ஆரோக்கியத்திற்காக அனைத்து முஸ்லிம்களும் பிராரத்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Reviewed by Editor
on
March 08, 2021
Rating: