
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம் ( ICFCG) ஏற்பாடு செய்த "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" இரத்ததான நிகழ்வு இன்று (10) சனிக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 4.00மணி வரை அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள அஹ்லுஸ் ஸுன்னா ஜும்ஆ பள்ளிவாயலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் சுமார் 180ற்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இந்த உயரிய சேவையான இரத்ததான முகாமினை செய்து இன மதங்களுக்கு அப்பால் பல உயிர்களை காப்பாற்ற இந்த இரத்ததான முகாம் உதவியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் 180பேர் இரத்ததானம் செய்தனர்!!!
Reviewed by Editor
on
April 10, 2021
Rating:
