(றிஸ்வான் சாலிஹூ)
சர்வதேச அரங்கில் 24 நாடுகள் போட்டியிட்ட காட்டா கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிட்டு முதலாம் இடத்தை பெற்ற அப்துல் காதர் முஹம்மட் அப்றி மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற அனீபா முஹம்மட் சஸா அவர்களையும் அக்கரைப்பற்று அல்/பாத்திமியா வித்தியாலய அதிபர் ஏ.எம்.மிஸ்வர் மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
இச்சாதனையாளர்களை பயிற்றுவித்த ராம் கராத்தே சம்மேளனத்தின் ஸ்தாபகர் sihan sensei k.kenthiramoorthy (sir) அவர்களுக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான K.Ramil (sir) மற்றும் k.Sarangan (sir) அவர்களுக்கும் ஏனைய பயிற்றுப்பாளர்களான கறுப்புப்பட்டி வீரர்களுக்கும் இக்கல்லூரி சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் மிஸ்வர் தெரிவித்துள்ளார்.
