புதிய வைத்திய அதிகாரி கடமையை பொறுப்பேற்றார்....


சாய்ந்தமருது சுகாதார புதிய வைத்திய அதிகாரியாக டாக்டர். அல் அமீன் றிசாத் இன்று (15) வியாழக்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கு கடமையாற்றிய டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

சுகாதார துறையின் சிகிச்சை பிரிவில் (curative sector) நன்கு அனுபவம் வாய்ந்த வைத்தியர் றிசாத், பொது சுகாதார நோய் தடுப்பு பிரிவிலும் (preventive sector) தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய வைத்திய அதிகாரி கடமையை பொறுப்பேற்றார்.... புதிய வைத்திய அதிகாரி கடமையை பொறுப்பேற்றார்.... Reviewed by Editor on April 15, 2021 Rating: 5