இந்திய கர்நாடகவில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கிசிச்சை வழங்குவதற்கான இடவசதி இல்லாததன் காரணத்தினால் முச்சக்கர வண்டியில் வைத்து குடும்பத்தினர் சிகிச்சை வழங்குவதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கலபுரகி மாவட்டத்திலும் இதே நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கலபுரகி டவுனை சேர்ந்த 55 வயது பெண் சளி, மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கலபுரகி ஜிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அதுபோல் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கை இல்லை என்று கூறிவிட்டனர்.
Reviewed by Editor
on
April 20, 2021
Rating:
