இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் வைத்திய நிபுணர்...


இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண் உளவியல் நிபுணராக (MD Psychiatrist ) டாக்டர் மிர்ஷா ஜமால்டீன் தனது கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டப்படிப்பை (MBBS) பூர்த்தி செய்த இவர் கொழும்பு மருத்துவ பட்டப்பின் படிப்பு (PGIM) நிருவகத்தில் தனது MD கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார்.

இக்கற்கை நெறியின் Part 01 பரீட்சையில் Gold Medal பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டியை பிறப்பிடமாகவும் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் உளவியல் துறையில் Senior Registrar ஆக கடமை புரியும் இவரின் சேவை குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு வரப்பிரசாதமே.


நன்றி - Lankahealthtamil.com

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் வைத்திய நிபுணர்... இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் வைத்திய நிபுணர்... Reviewed by Editor on April 20, 2021 Rating: 5