ஜனாஸா நலன்புரி ஒன்றியத்திற்கு கபன் சீலைகள் வழங்கி வைப்பு.


(எஸ்.அஷ்ரப்கான்)

சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி ஒன்றியத்திற்கு கபன் சீலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹாபிஸ் எம்.ரி.எம்.ரமீஸ் தலைமையில் பதஹ் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பகுப்பாய்வாளர் அஸ்மி யாஸின் அவர்களினால் சமீர் முக்தார் ஹாஜியார் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி, அவரினால் வழங்கப்பட்ட கபன் சீலைகள் இவ்வாறு ஜனாஸா ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த கபன் சீலைகளானது ஏழை மக்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படவேண்டுமென இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.கே.எம் ரம்சீன் (மௌலவி), ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் வை.எல்.எம். ஜலீல் (மௌலவி), மஜ்லிஸ் அஷ்ஷூராவின் முன்னாள் பொதுச் செயலாளர், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எச்.ஏ. றாஸிக், மற்றும் சம்மாந்துறை மையவாடி பள்ளிவாசல் தலைவர் உட்பட சமூக நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாஸா நலன்புரி ஒன்றியத்திற்கு கபன் சீலைகள் வழங்கி வைப்பு. ஜனாஸா நலன்புரி ஒன்றியத்திற்கு கபன் சீலைகள் வழங்கி வைப்பு. Reviewed by Editor on April 21, 2021 Rating: 5