
இலங்கையின் 33ஆவது பொலிஸ் மாஅதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தனது 68ஆவது வயதில் இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
1978 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் பரிசோதகராக (ASP) பொலிஸ் சேவையில் இணைந்த அவர், பல்வேறு பதவிகளில் வகித்ததோடு, பிரேசில், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றிய அவர், 2014இல் சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் காலப்பகுதியில் நாடு முழுவதும் 119 அவசர தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் காலமானார்
Reviewed by Editor
on
April 29, 2021
Rating:
Reviewed by Editor
on
April 29, 2021
Rating: