வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்!



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று மாநகர பொதுச்சந்தை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இன்று (28) புதன்கிழமை அக்கரைப்பற்று பொதுச்சந்தை பள்ளிவாசலில் இடம்பெற்றது. 



இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி WMHS.விஜேதுங்க, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி P.T. கபூர் மற்றும் பொதுச் சந்தை வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.



இக் கலந்துரையாடலின் போது, பொதுச் சந்தை வியாபாரிகள் சமகாலத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றிற்கான சுமூகமான தீர்வுகளும் முன் வைக்கப்பட்டது என்று முதல்வர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.






வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்! வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்! Reviewed by Editor on April 28, 2021 Rating: 5