Oxford Astra Zeneca தடுப்பூசி 2 ஆவது சொட்டு வழங்கும் பணி மே மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் இன்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கொவிட் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக வழங்கப்படும் 2 ஆவது சொட்டு மருந்து என்ற ரீதியில் சீனா பாம் தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
முதலாவது தடுப்பூசி என்ற ரீதியில் Oxford Astra Zeneca தடுப்பூசி வழங்கப்பட்டிருக்குமாயின், 2 ஆவது தடுப்பூசி சொட்டு மருந்தாக Oxford Astra Zeneca தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று தற்பொழுது சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கமைவாக அரசாங்கம் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Oxford Astra Zeneca தடுப்பூசியின் முதலாவது சொட்டு மருந்து ஜனவரி மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்ட நாள் முதல் 4 வார காலத்துக்குள் 2 ஆவது சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும் புதிய விஞ்ஞான தரவுகளுக்கு அமைவாக 12 வாரங்களின் பின்னர் வழங்குவது மிகவும் பொருத்தமானது என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2 ஆவது சொட்டு தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டியது ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஆகும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு அந்த 2 சொட்டு வழங்கும் பணி மே மாதம் 01 ஆம் திகதி வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Reviewed by Editor
on
April 20, 2021
Rating:
