நேசன் எயிட் சிறிலங்கா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!!


புனித ரமலானை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முக்கிய தேவையுடையவர்களாக தேர்வு செய்யப்பட்ட  100ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் அவர்கள் இன்று (26) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வானது கல்முனை மாநகர சபை உறுப்பினர் திருமதி சுகையில் அஸுஸ் அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படட்டது.

சாய்ந்தமருது பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானா ,கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆயிஷா சித்திக்கா மற்றும் நேசன் எயிட் சிறி லங்கா  நிறுவனத்தின் பிரதேச இணைப்பாளார்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

நேசன் எயிட் சிறிலங்கா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!! நேசன் எயிட் சிறிலங்கா நிறுவனத்தினால்  உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!! Reviewed by Editor on April 26, 2021 Rating: 5