தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கிஉயிரிழந்துள்ள சம்பவம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சுஹைல் மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த 14வயதுடைய அலிப்தீன் அஸ்கார் எனும் இரண்டு சிறுவர்களுமே ஆவார்கள்.
இவர்கள் இருவரும் நோன்பு பிடித்துக் கொண்டு இன்னும் சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில், அவர்களை நீரில் இருந்து மீட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
Reviewed by Editor
on
April 18, 2021
Rating:
