தடுப்பூசி வழங்கப்பட்ட மூவர் உயிரிழப்பு, சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!


அக்ஸ்ரா செனிகா தடுப்பூசி வழங்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியராச்சி இன்று (21) புதன்கிழமை பாராளுமன்றில் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்ட ஆறு நபர்கள் இரத்த உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கப்பட்ட மூவர் உயிரிழப்பு, சுகாதார அமைச்சர் அறிவிப்பு..! தடுப்பூசி வழங்கப்பட்ட மூவர் உயிரிழப்பு, சுகாதார அமைச்சர் அறிவிப்பு..! Reviewed by Editor on April 21, 2021 Rating: 5