(சர்ஜுன் லாபீர்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எச்.எம்.எம் ஹரீஸின் கல்முனை காரியலாயத்திற்கான இணைப்பு செயலாளராக எம். ஏ. சப்றாஸ் நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் விஷேட கலைமானிப் பட்டம் பெற்றார். அத்துடன் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைமானிப் பட்டமும், சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் டிப்ளோமா பட்டமும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும் இவர் தற்போது திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் 3வது வருட மாணவனாக பட்டப்படிப்பை மேற்கொண்டுவருகிறார். இவர் முன்னாள் கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.அலாவுத்தீனின் 3வது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளராக நிலாம் நியமனம்....
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
