கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) உத்தவிட்டுள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவேலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், அம்பாறை, வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத தை;தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் - 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோப்பிள்ளை நேற்று (04) செவ்வாய்க்கிழமை வழங்கியிருந்தார்.
இதனையடுத்தே, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்ற ஆளுநர் உத்தரவு
Reviewed by Sifnas Hamy
on
May 05, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
May 05, 2021
Rating:
