நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் இன்று (18) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்குச் சென்ற கார் ஒன்று நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியிலிருந்து வீதியை விட்டு விலகிக் குறித்த கார் சுமார் 100 பள்ளத்தில் உள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதிக்குப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கான காரணம் என இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Editor
on
May 18, 2021
Rating:

