ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழு கூட்டம்!

ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாராளுமன்ற குழு அறை 02 இல் இன்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்ற பரிந்துரை கௌரவ சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டப்பட்டது. இதன்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேடமாக தெளிவூட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து துறைமுக நகரத்துடன் தொடர்புடைய பொருளாதார நன்மைகள் மற்றும் மதிப்புகள் குறித்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழு கூட்டம்! ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழு கூட்டம்! Reviewed by Editor on May 18, 2021 Rating: 5